தமிழில் ஹ‌இகு

கண்களில் மேகமூட்டம்
கலங்கிட முகத்தில் புன்னகை
இளம்பருவமாயம்
Overcast eyes
As tears well up, a smile already forms on the face
The maayai (illusion or beauty or magic) of adolescence


பாடம் துவங்கியதும்
மழையின் ஆரம்பம் ー துரோகி!
மாணவனின் மனக்குறல்
As soon as classes start
So does the rain — "Traitor!"
The students all cry out in their hearts


வெளியே மழை கூவ
வீட்டில் வானொலி பாட
மழைக்கால மதியங்கள்
The rain falls outside [and]
The Radio sings indoors
Ah, monsoon afternoons


ஞாயிற்றின் உறக்க நேரம்
ஊரெல்லாம் இருள் சூழ
காட்டிலிருந்து கீதம்
As the Sun goes to sleep
And darkness covers all the town
A soft song calls from the forests


வெட்ப வெய்யில் தாங்கி
நிழல்தந்து காக்கும்
துயர்ந்த தனிமரம்
Suffering the naked heat
Protecting us with her heat
The long-suffering lone tree


கார்மேகக் குவியல்
வானத்தில் படைகள் சேர்ந்திட
நாடெல்லாம் கொண்டாட்டம்
A gathering of rainclouds
As armies amass in the skies
All the lands celebrate